உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை ஆருத்ரா தரிசன விழா: வெள்ளியம்பலத்தில் இருந்து 5 நடராஜர் வீதி உலா!

மதுரை ஆருத்ரா தரிசன விழா: வெள்ளியம்பலத்தில் இருந்து 5 நடராஜர் வீதி உலா!

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு, வெள்ளியம்பலத்தில் இருந்து கிளம்பிய 5 நடராஜர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மட்டுமே பஞ்சலோகத்திலான பஞ்ச சபை நடராஜருக்குரிய ஐந்து உற்சவர் திருமேனிகள் (பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தினசபை, தாமிர சபை, சித்திரைசபை) தனித்தனியாக உள்ளன. கால்மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் சுவாமிகள் ஆகியோரது உற்சவ திருமேனிகள் சுவாமி கோயில் ஆறு கால் பீடத்தில் எழுந்தருளியும், இதர நான்கு சபை சுவாமி நடராஜர், சிவகாமி அம்மன் 100 கால் மண்டபத்தில் எழுந்தருள செய்து ஏக காலத்தில் இரு இடங்களிலும் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கால பூஜைகள் முடிந்து ஜன.,11 காலை 7:00 மணிக்கு பஞ்ச சபை ஐந்து உற்சவ நடராஜர், சிவகாமி அம்மனுடன் நான்கு மாசி வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !