உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. மாணிக்கவாசகருக்கு, சபாபதி சுவாமி காட்சியளித்தார். நேற்று காலை, திருக்கோயிலில் இருந்து மாணிக்கவாசகர் பல்லக்கில் புறப்பாடாகி சபாபதி சன்னதி முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமிக்கு மஞ்சள், பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், திரவிய பொடியில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் உள்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !