பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி உற்சவம்
ADDED :3235 days ago
பரமக்குடி, பரமக்குடி சுந்தரராஜப் பெரு மாள் கோயிலில் ஆண்டாள் நாச்சி யார் பெருமாளுடன் சேர்க்கையான கூடாரவல்லி உற்சவம் நடந்தது. இதன்படி ஆண்டாள், பெருமாளிடம் 108 அண்டாவில் சர்க்கரை பொங்கல், 108 அண்டாவில் வெண்ணெய் படைப்பதாக வேண்டியிருந்தார். பின்னாளில் ராமானுஜர் இதனை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதனை நினைவு கூறும் விதமாக பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் 216 வட்டிலில் பொங்கல், வெண்ணெய் படைக்கப்பட்டது. காலை 6:00 மணிக்கு ராமானுஜர் வீதியுலா நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.