உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வட சென்னையில் நவ நடராஜர்கள் சந்திப்பு

வட சென்னையில் நவ நடராஜர்கள் சந்திப்பு

மண்ணடி: வட சென்னையில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள உற்சவ மூர்த்திகள், நடராஜர் அலங்காரத்தில் வீற்றெழுந்து, நவ நடராஜர்களாக சந்திக்கும் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள், நடராஜரின் அருளை பெற்றனர். மண்ணடி, முத்தியால்பேட்டை பகுதிகளில் உள்ள , அனைத்து திருக்கோவில்களின் நடராஜ மூர்த்திகளின், நவ நடராஜர் சந்திப்பு நேற்று நடந்தது. மல்லிகேஸ்வரர் கோவில் முன், நடந்த இந்நிகழ்ச்சியில், நடராஜர்களுக்கு நெய்வேத்தியம், தீபாராதனை நடந்தது. ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ எனக் கூறி, பக்தர்கள் மலர்களை துாவி, இறை அருள் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !