உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகாதாரமற்ற தெப்பக்குளம் துார்வாரி நீர் நிறைக்கப்படுமா?

சுகாதாரமற்ற தெப்பக்குளம் துார்வாரி நீர் நிறைக்கப்படுமா?

திருப்பரங்குன்றம்:  திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி., ரோடு பகுதியில் சுகாதாரமற்ற நிலையிலுள்ள தெப்பக்குளத்தில்  தெப்பத்திருவிழாவிற்காக தண்ணீர் நிரப்பப்படுகிறது. தெப்பக்குளம் தண்ணீரில்  ஆண்டுக்கு ஒரு முறை தை மாதம் மிதவை தெப்பம்  அமைக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை  எழுந்தருள்வர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க காலை மூன்று சுற்றுகளும், இரவு  மூன்று சுற்றுக்களும் தெப்பம் தண்ணீரில் சுற்றிவரும்.சமீபகாலமாக மழை இல்லாததால் தெப்பம் வறண்டு கிடந்தது.  தெப்பத்திருவிழாவிற்காக தெப்பக்குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தற்போது சுகாதாரமற்ற  நிலையிலுள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டு தெப்பத்திருவிழா பிப். 5ல் நடக்கிறது. நாட்கள் அதிகம்  இருப்பதால் சுகாதாரமற்ற நிலையிலுள்ள தெப்பக்குளத்தை துார்வாரி அதன் பின்பு தண்ணீர் நிரப்ப கோயில் நிர்வாகம் நடவடிக்கை  எடுக்க பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !