குதிரை வாகனத்தில் சுந்தரராஜப் பெருமாள் வீதி உலா
ADDED :3191 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பொங்கல் விழாவையொட்டி கனுப்பாரி உற்சவ விழா நடந்தது. பெருமாள் கோயிலில் மார்கழி உற்சவம் நேற்று முன்தினம் தை முதல் நாளுடன் நிறைவடைந்தது. வைகுண்ட ஏகாதசி விழாவின் இராப்பத்து உற்சவம் தினமும் இரவு 7 மணிக்கு நடக்கிறது. பொங்கல் விழாவையொட்டி நேற்று காலை பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி புஷ்ப ரதத்தில் வீதியுலா வந்தார். இரவு தாயார் மண்டபத்தில் சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து இராப்பத்து உற்சவத்தில் திருமங்கையாழ்வார் மோட்சம் அளிக்கும் விழா நடந்தது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.