ராமேஸ்வரத்தில் பொங்கல் விழா வெளிநாட்டு பயணிகள் உற்சாகம்
ADDED :3192 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில், சுற்றுலாத்துறை நடத்திய பொங்கல் விழாவில் வெளிநாட்டு பயணிகள் பங்கேற்று உற்சாகம் அடைந்தனர். ராமேஸ்வரம் விழா தமிழ்நாடு ஓட்டலில் பொங்கல் விழா நடந்தது. விழாவில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்று பொங்கல் சமைத்து கொண்டாடினர். தொடர்ந்து, கிராமிய கலைஞர்களின் நாதஸ்வரம், மேள இசை நிகழ்ச்சி, சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இவற்றில் பங்கேற்ற வெளிநாட்டு பயணிகள் சிலம்பு சுழற்றியதுடன், ஆடி பாடி கொண்டாடினர். இவ்விழாவில் சுற்றுலாதுறை அலுவலர் பாலசுப்பிரமணியன், முன்னாள் நகராட்சி தலைவர் அர்ச்சுனன் உள்பட சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவருக்கும் சுற்றுலாத்துறை ஊழியர்கள் இனிப்பு பொங்கல் வழங்கினர்.