ஆல்கொண்டமால் கோவில் திருவிழா: சுவாமிக்கு அபிஷேகம்
ADDED :3192 days ago
உடுமலை: கால்நடைகளின் நலன்வேண்டி உடுமலை ஆல்கொண்ட மால் கோவில் திருவிழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. உடுமலை ஆல்கொண்ட மால் கோவில் திருவிழாவில் பக்தர்கள் வழங்கிய பாலை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். விவசாயிகள் தங்கள் கால்நடைகளின் நலன்வேண்டி, சுவாமிக்கு பால்அபிஷேகம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருத்து தரிசனம் செய்தனர்.