ஊத்துக்கோட்டை பெரியாயி அம்மனுக்கு சிறப்பு பூஜை
ADDED :3192 days ago
ஊத்துக்கோட்டை: பெரியாயி அம்மனுக்கு நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். எல்லாபுரம் ஒன்றியம், எல்லம்பேட்டை கிராமத்தில் உள்ளது பெரியாயி அம்மன் கோவில். சென்னை - திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கோவிலில், தினமும், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் வாகனங்களை நிறுத்தி அம்மனை வழிபட்டு செல்கின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள் இங்கு அம்மனை தரிசிக்கின்றனர். பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கலையொட்டி, திரளான பக்தர்கள் குடும்பத்துடன் அம்மனை வழிபட்டனர். பண்டிகை நாளையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. கோவில் முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.