திருப்பரங்குன்றம் கோயிலில் உழவாரப்பணி
ADDED :3227 days ago
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தர் பேரவை சார்பில் உழவாரப்பணி நடந்தது. அமைப்பாளர் வெயில்முத்து தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சுந்தரவடிவேல் பேசினார். கோயில் பிரகாரம், சன்னதி, சரவண பொய்கை தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் 110 தொண்டர்கள் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். சரவண பொய்கை புனிதம் காக்க துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சாந்தி, சீனிவாசன், விஜய்ஆனந்த், காளி, சிவா செய்திருந்தனர்.