தாண்டிக்குடி பாதை விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :3297 days ago
தாண்டிக்குடி, தாண்டிக்குடி பாதை விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் விநாயகர் வழிபாடு, மகாசங்கல்பம், வருண வழிபாடு, விநாயகர் பிரதிருஷ்டை, சுவாமி எழுந்தருளல், மகா கணபதி ஹோமம், பிம்பசுத்தி, ரக்ஷபந்தனம், நாடி சந்தானம், கனி மூலிகை ஹோமம், மகா பூர்ணாஹூதி பூஜையுடன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.