இந்தளூர் மணம்புரீஸ்வர் கோவில் சீரமைப்பு பணியில் கிராம மக்கள்
ADDED :3227 days ago
இந்தளூர்: தொல்லியல் துறைக்கு சொந்தமான, இந்தளூர் மணம்புரீஸ்வர் கோவில், அப்பகுதிவாசிகளால் சீரமைக்கப்படுகிறது. சித்தாமூர் ஒன்றியம், இந்தளூரில், 500 ஆண்டுகள் பழமையான மணம்புரீஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவில், மணம்புரீஸ்வர் என பெயர் பெற்றுள்ளதால், திருமணம் நடைபெற வேண்டுபவர்களுக்கு, விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். கடந்த சில ஆண்டுகளாக, இக்கோவில் கோபுரம் மற்றும் கோவில் வளாகத்தில் மரங்கள் வளர்ந்து, பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால், கோவிலை சீரமைக்க, சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்களிடம், நன்கொடை வசூலித்த கிராமத்தினர், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பணிகளை மேற்கொள்கின்றனர்.