உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லபை கணபதி கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழா

வல்லபை கணபதி கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழா

வேலாயுதம்பாளையம்: காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள வல்லபை கணபதி கோவிலில் நடந்த சங்கடகரா விஷேச பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி வழிப்பட்டனர்.பிரசித்திபெற்ற கோவிலில் நேற்று முன்தினம் சங்கடகரா சதுர்த்தியை முன்னிட்டு மஹா கணபதிக்கு காலை 11 மணிக்கும், இரவு 7 மணிக்கும் பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சள் உட்பட பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனையும் நடந்தது.தொடர்ந்து பூக்களால் சர்வ அலங்காரம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !