உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐப்பசி முதல் வார சஷ்டி அபிஷேக விழா

ஐப்பசி முதல் வார சஷ்டி அபிஷேக விழா

வேலாயுதம்பாளையம்: புகழிமலை பாலசுப்ரமணி ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத முதல் வார சஷ்டி அபிஷேகம் வெகுசிறப்பாக நடந்தது.கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் சஷ்டியை முன்னிட்டு உச்சி கணபதி, பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு, பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சள் உட்பட பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனையும் நடந்தது.தொடர்ந்து பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. வேலாயுதம்பாளையம் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் உள்ள செந்தில் ஆண்டவர் ஸ்வாமிக்கும் சஷ்டி விரதம் மற்றும் அபிஷேகங்கள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !