உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமதண்டீஸ்வரர் கோவிலில் உலக அமைதிக்கு சிறப்பு வழிபாடு

எமதண்டீஸ்வரர் கோவிலில் உலக அமைதிக்கு சிறப்பு வழிபாடு

மயிலம்: ஆலகிராம எமதண்டீஸ்வரர் கோவிலில் உலக அமைதிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மயிலம் அடுத்த ஆலகிராமத்தில் திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வர் கோவிலில் உலக அமைதிக்கு கூட்டுவழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு கோவில் வளாகத்திலுள்ள மூலவர், நந்தி, சித்தர், விநாயகர் சுவாமிகளுக்கு காலை 11:00 மணிக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு திரிபுர சுந்தரி அம்மனுக்கு திருமஞ்சன வழிபாடு மகா தீபாரதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் உலக அமைதிக்கு கூட்டு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை சிவனடியார் சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !