ஆவல்நத்தம் சிவன் கோவிலில் அடிப்படை வசதியின்றி அவதி
ADDED :3212 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் ஆவல்நத்தம் கிராமத்தில், பழைமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர். கோவில் வளாகத்தில் குளிக்கும் பக்தர்களுக்கு உடை மாற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே அறைகள் இல்லை. மேலும், கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, இந்த கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.