மகா மாரியம்மன் கோவில் வேப்பமரத்தில் பால்: பக்தர்கள் பரவசம்
ADDED :3212 days ago
சென்னிமலை: கோவில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால், பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னிமலை ஒன்றியம் ஈங்கூரில், பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் அரசமரமும், வேப்பமரமும் ஒரே இடத்தில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்நிலையில் வேப்பமரத்தின் அடிப்பகுதியில் இருந்து, மூன்று அடி உயரத்தில், நேற்று காலை திடீரென பால் வடிந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதைப் பார்த்து பரவசம் அடைந்தனர். இதையடுத்து மரத்துத்து சேலை, மாலை அணிவித்து, மஞ்சள் நீர் ஊற்றி சிறப்பு பூஜை செய்தனர். தகவல் பரவியதால், ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். வேப்பமரத்தை வணங்கி சென்றனர்.