உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவில் மண்டல அபிஷேகம்

காளியம்மன் கோவில் மண்டல அபிஷேகம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, பொம்மாநாயக்கன்பட்டியில் விநாயகர், காளியம்மன், கன்னிமார்கள், கருப்பசாமி கோவில்கள் தனித்தனியே உள்ளன. இந்த கோவில்களுக்கு, பொதுமக்கள் சார்பில், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, நாள்தோறும், சிறப்பு அபிஷேம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காட்டப்பட்டன. இந்நிலையில், காளியம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு, 48வது சிறப்பு மண்டல அபிஷேகம் நடந்தது. முன்னதாக, காவிரியில் இருந்து புண்ணிய தீர்த்தக்குடங்களை எடுத்துக்கொண்டு, பக்தர்கள் வீதிஉலா வந்தனர். பின், சிறப்பு யாகம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !