அம்மனுக்கு தை திருவிழா: பெண்கள் பால்குட ஊர்வலம்
ADDED :3210 days ago
சேலம்: அம்மனுக்கு நடக்கும் தை திருவிழாவில், நேற்று, பெண்கள் பால்குட ஊர்வலம் நடத்தி வழிபட்டனர். சேலத்தில், எட்டு பட்டிகளில் அருள் பாலிக்கும் அம்மன்களுக்கு, ஏழு பட்டிகளில் ஆடி திருவிழா. தாதகாப்பட்டி கேட், சக்தி காளியம்மனுக்கு மட்டுமே, தை திருவிழா கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு விழா, கடந்த 17ல், பூச்சாட்டுதலுடன் துவங்கின. நேற்று, மஞ்சள், சிவப்பாடை சகிதமாக பெண்கள் பால்குட ஊர்வலம் நடத்தினர். கோவில் திடலில், காலை, 9:00 மணியளவில் துவங்கிய ஊர்வலம், பில்லுக்கடை, மேட்டுத்தெரு, சீரங்கன் தெரு, திருச்சி மெயின்ரோடு வழியாக வந்து, காலை 10:30 மணியளவில், கோவிலை அடைந்தது. அதன்பின், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தி, வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில், சக்தி காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.