உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாமுனீஸ்வரர் திருக்கல்யாணத்தில் திரண்ட பக்தர்கள்

மகாமுனீஸ்வரர் திருக்கல்யாணத்தில் திரண்ட பக்தர்கள்

வால்பாறை: புதுத்தோட்டம் ஆலமரம் அய்யன் மகாமுனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி, சிவசக்திக்கு நடைபெற்ற திருக்கல்யாணத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  வால்பாறை புதுத்தோட்டம் அருகே அமைந்துள்ள ஆலமரம் அய்யன்மகாமுனீஸ்வரர், பாணலிங்க சிவசக்தி கணபதி கோவிலின், 58ம் ஆண்டு திருவிழா கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சுவாமிக்கு ஒவ்வொரு நாளும் காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. விழாவில்,  கடந்த, 25ம்தேதி மாலை மகாமுனீஸ்வரர், அன்னைஆதிபராசக்தி, ஆஞ்சநேயர், கருப்புசாமி, மாடசாமி சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சிவபெருமானுக்கும், பார்வதிதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !