உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் வர்ணம் பூச்சு

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் வர்ணம் பூச்சு

பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழாவையொட்டி வர்ணம் பூசும் பணி நடைபெறுகிறது. பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். குண்டம் திருவிழா கடந்த 27ம் தேதி துவங்கியது. வரும் 9ம் தேதி இரவு, 12:00 மணிக்கு மயான பூஜையும், வரும் 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதனையடுத்து, கோவில் நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளில்,பெயிண்டிங் அடிக்கும் பணியும் நடைபெறுகிறது. கோவில் திருவிழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !