உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொங்காலம்மன் கோவில் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

கொங்காலம்மன் கோவில் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

ஈரோடு: ஈரோடு, கொங்காலம்மன் கோவில் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் நேற்று தொடங்கியது. நேற்று காலை, ஆதி கொங்காலம்மன் எழுந்தருளியுள்ள ஆனங்கூரில் சிறப்பு பூஜை நடந்தது. மாலை பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. இன்று காவிரி தீர்த்தம் எடுத்து வருதல், காப்பு கட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அம்மன் புறப்பாடு, கோவில் கரகம் ஊர்வலம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு மற்றும் மலர் பல்லக்கு, சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. பிப்., 10 அன்று விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி நடக்கிறது. தேரோட்டத்தின் மறுநாள் மஞ்சள் நீராட்டு, சங்காபிஷேகம், தெப்ப உற்சவம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !