ராமேஸ்வரத்தில் உலக நன்மைக்காக 108 பசுவுக்கு கோ பூஜை
ADDED :3169 days ago
ராமேஸ்வரம்:உலக நன்மைக்காக ராமேஸ்வரத்தில் 108 பசு மாடுகளுக்கு கோ பூஜை மற்றும் சோம யாக பூஜை நடந்தது. இந்தியாவில் பசு மாடுகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து அகில இந்திய கோ சேவா சமிதி அமைப்பினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பசுவின் புனிதம் காக்கவும், உலக நன்மைக்காகவும் கோ சேவா சமிதி சார்பில் ராமேஸ்வரத்தில் நேற்று 108 பசு மாடுக்கு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து ஒசோன் படலத்தில் உருவாகியுள்ள தீங்கு விளைவிக்கும் வாயு நீங்கி, மழை பொழிந்து விவசாயம் பெருக வேண்டி 108 யாக குண்டங்கள் அமைத்து, வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க சோம யாக பூஜை நடந்தது. இதில் அகில இந்திய கோ சேவா சமிதி தலைவர் சங்கர்லால், வன்னியராஜன், பா.ஜ.க., மாவட்ட தலைவர் முரளீதரன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.