காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் தரிசனம் கிடைக்காமல் பக்தர்கள் ஏமாற்றம்
ADDED :3171 days ago
திருப்பதி:ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில், வரும், 8ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளதை ஒட்டி, 4ம் தேதி முதல் கோவில் நடை சாத்தப்பட்டு, அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் முடிந்தவுடன், வழக்கம் போல தரிசனங்கள் மீண்டும் தொடங்க உள்ளன. ஆனால், இதுகுறித்த தகவல் பக்தர்களை சரிவர சென்று அடையாததால், நேற்று வார விடுமுறையை ஒட்டி, ஏராளமானோர் ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்தனர். தரிசனம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.