உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலவநத்தம் சிவசந்தநாதசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

பாலவநத்தம் சிவசந்தநாதசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பாலவநத்தம் சிவசந்தநாதசுவாமி பரிபூரணதம்மாள்-இருளப்பசுவாமி கோயில் கும்பாபிஷேகம்  பிப்ரவரி 3ல் விநாயகர் பூஜையுடன் துவங்கியது. பிப். 4ல் மஹாகணபதி, நவகிரஹ, லட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தன.  பிப். 5ல் மூன்றாம் கால யாக பூஜை நடந்தன. நேற்று காலை 10:24 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களின் மீது புனிதநீர்  தெளிக்கப்பட்டது. கமிட்டி தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். பொருளாளர் சங்கர்ராஜ் வரவேற்றார். பாரத ஸ்டேட் வங்கி  முதன்மை மேலாளர் முருகானந், பள்ளி கல்வித்துறை பார்த்திபன் உட்பட பலர் கலந்துகொண்டனர். அன்னதானமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !