முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :3175 days ago
இடைப்பாடி: முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தக்குட ஊர்வலம் சென்றனர். கொங்கணாபுரம் ஒன்றியம், கன்னியாம்பட்டி, முத்துமாரியம்மன், வெற்றி விநாயகர் சுவாமிகளுக்கு, கோவில் கட்டப்பட்டு, நாளை மறுநாள் கும்பாபி?ஷகம் நடக்கிறது. அதற்கு, கோவில் கோபுரம் மீது ஊற்ற, கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், குடங்களில் தீர்த்தம் எடுத்து, ஊர்வலமாக, கோவிலை வந்தடைந்தனர். ஜல்லிக்கட்டு காளை, பசுமாடு, குதிரை ஆகியவற்றுடன், செண்டை மேளம் முழங்க சென்ற ஊர்வலத்தில், கன்னியாம்பட்டி, கருங்கன்வளவு பகுதிகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.