திருவண்ணாமலையில் கிரிவலம் உகந்த நேரம் அறிவிப்பு
ADDED :3378 days ago
வேலுார்: திருவண்ணாமலையில், தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், நாளை இரவு, 8:01க்கு துவங்கி, 11ம் தேதி மாலை, 6:51 மணிக்கு நிறைவடைகிறது.இதையொட்டி, 10 மற்றும், 11ம் தேதிகளில், அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும். அண்ணாமலையார் கோவில் மகா கும்பாபிஷேகத்துக்கு பின், மண்டல பூஜை நடை பெறும் நாளில், பவுர்ணமி கிரிவலம் செல்வது மிகவும் சிறப்புக்குரியது. எனவே, வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள், இம்மாத பவுர்ணமியில் கிரிவலம் செல்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.