அருணாசலேஸ்வரர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்
ADDED :3391 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா நேற்று சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 6ல் மஹா கும்பாபிேஷகம் நடந்தது. இதையடுத்து, தற்போது, 48 நாட்கள் நடக்கும் மண்டல பூஜை நடந்து வருகிறது. நேற்று பிரதோஷம் என்பதால், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, மாலை, 7:30 மணிக்கு வந்தார். யாகசாலைக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு, கொடிமரம் அருகில் உள்ள அதிகார நந்தியை வழிபட்டார். அதன் பின், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து, நவக்கிரக சன்னதியில் நெய் தீபமேற்றி வழிபட்டார். அப்போது கோவில் சிவாச்சாரியார்கள் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர். உடன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அண்ணாதுரை இருந்தார்.