உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்துார் சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை

ஆத்துார் சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை

ஆத்துார் : சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ பூஜையில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஆத்துார் அருகே, தென்பொன் பரப்பி, சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், பிரதோஷம் முன்னிட்டு, நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, சொர்ணபுரீஸ்வரர் மற்றும் நந்தி தேவருக்கு, பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் என, 16 வகை அபிஷேகம் நடந்தது. பின், சொர்ணபுரீஸ்வரர் மற்றும் நந்தி தேவர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வீரகனுார், நாவக்குறிச்சி ஆகிய சிவன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !