செம்மினிப்பட்டியில் பூக்குழி இறங்குதல்
ADDED :3244 days ago
மேலுார்: மேலுார் அருகே செம்மினிப்பட்டியில் ஆண்டி பாலகர் முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு திருவிழா கொண்டாடப்பட்டது. மேலுார், செம்மினிப்பட்டி, கொங்கம்பட்டி, கொடுக்கம்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் முன் பூக்குழி இறங்கினர். இக்கோயிலில் முருகன் சிலைக்கு பதிலாக வேல் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் உறங்கான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புலிமலைப்பட்டி முருகன் கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளில் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது.