பறவைக்காவடியில் பக்தர்கள் பரவசம்
ADDED :3243 days ago
வால்பாறை :தைப்பூசத்திருவிழாவில், நேற்று பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 12ம் ஆண்டு தைப்பூசத்திருவிழா கடந்த, 5 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று காலை, 10:00 மணிக்கு வால்பாறை காமாட்சிஅம்மன் கோவிலிருந்து தீர்த்தம், பால்குடம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, சுவாமிக்கு அபிேஷக பூஜை செய்யப்படுகிறது. நல்லகாத்து பாலத்திலிருந்து பக்தர்கள் பறவைக்காவடி, அழகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.