உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் பாலமுருகன் சுவாமி கோயிலில் தைபூச உற்சவம்

சோழவந்தான் பாலமுருகன் சுவாமி கோயிலில் தைபூச உற்சவம்

தென்கரை: சோழவந்தான் தென்கரை வள்ளிதெய்வாணை சமேத பாலமுருகன் சுவாமி கோயிலில் தைபூசத்தை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.  தென்கரை அகிலாண்டேஸ்வரியம்மன்,திருமூலநாதர்சுவாமி கோயிலில் அமைந்த பாலமுருகன் சுவாமி சன்னதியில் தைபூச உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. தேவியருடன் பாலமுருகன் சுவாமிக்கு சிவாச்சாரியார் நாகராஜ் பல்வேறு அபிஷேக,தீபாராதனைகள் செய்தார். பக்தர்கள் கொண்டுவந்த பூஜை பாலால் முருகன் சுவாமிக்கு பாலாபிஷேகம், சிறப்பு தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர்மயில்வாகனத்தில் தண்டாயுதபாணி அலங்காரத்தில் பவனி வந்து பக்திர்களுக்குஅருள்பாலித்தார். நேற்று காலை தைபூசத்தை முன்னிட்டு பவுர்ணமி சிறப்பு பூஜைகள், அன்னதானம்,பக்தர்களுக்கு சுõவமி பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில்நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள், ஆலயபணியாளர்கள் செய்திருந்தனர். இதுபோல் மண்ணாடிமங்கலம் சத்யபாமாருக்மணி வேல்முருகன் சுவாமி கோயிலில் தைபூச பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !