சந்தனமலை முருகன் கோவில் மகா கும்பாபிேஷகம்
கூடலுார் :கூடலுார், ஓவேலி சந்தனமலை முருகன் கோவில், மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.கூடலுார், ஓவேலி கிளன்வன்ஸ் பகுதியில் உள்ள, சந்தனமலை முருகன் கோவில் கும்பாபிஷேக திருவிழா கடந்த, 7ல் துவங்கியது. காலை, 9:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது.காலை, 11:30 மணிக்கு திரவ்யாகுதி, புர்ணாகுதி, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பகல், 12:00 மணிக்கு யாகசாலை நிர்மாணம், மாலை, 5:00 மணிக்கு முதல் கால யாகபூஜை நடந்தது. தொடர்ந்து, 8ம் தேதி, 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. 10:00 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், 12:00 மணிக்கு தீபாராதனை நடந்தன. மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, இரவு, 8:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, சுவாமி சிலைகளுக்கு காப்பு கட்டுதல், நான்காம் கால யாக பூஜை, 8:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நிகழ்ச்சியும் நடந்தன. காலை, 9:00 மணிக்கு பக்தர்கள் முன்னிலையில், மகாகும்பாபிஷேகம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. தொடர்ந்து, 11:00 மணிக்கு மகா அபிஷேகம் நிகழ்ச்சி நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.