பழனியாண்டவர் கோவிலில் தேரோட்டம்
ADDED :3265 days ago
பவானி: பழனியாண்டவர் கோவில் தைப்பூச தேரோட்டம் நடந்தது. பவானி தபால் தலைமை அலுவலகம் அருகில், பழனியாண்டர் கோவில் உள்ளது. கடந்த, 2ல், கொடியேற்றத்துடன் தைப்பூச தேர்த்திருவிழா தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலை, இரவு நேரங்களில் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை, 9:30 மணிக்கு நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். முன்னதாக வள்ளி, தெய்வானை உடனமர் பழனியாண்டவருக்கு காலையில் திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.