வெங்கட்ரமணசாமி கோவில் தேர்த் திருவிழா
ADDED :3162 days ago
ஓசூர்: தளி அருகே, மதகொண்டப்பள்ளியில், பிரசித்தி பெற்ற பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கட்ரமணசாமி கோவில் உள்ளது. கோவிலின் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர், தேர்த்திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கட்ரமண சாமி வீதி உலா வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக, வலம் வந்தன. மதகொண்டப்பள்ளி, தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.