உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூடாமணி மாசாணி அம்மன் கோவில் பூக்குழி விழா கோலாகலம்

சூடாமணி மாசாணி அம்மன் கோவில் பூக்குழி விழா கோலாகலம்

கரூர்: சின்னதாராபுரம் அருகே, சூடாமணி மாசாணி அம்மன் கோவிலில், பூக்குழி திருவிழா நேற்று நடந்தது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மக திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த, 27ல் முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. அதை தொடர்ந்து, நாள்தோறும் மாசாணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு அக்னி கரகம் எடுத்தல், சக்தி அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. இன்று காலை கோவிலில் மறு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !