மரவனேரியில் தன்வந்த்ரி ஹோமம்: பக்தர்கள் பங்கேற்பு
ADDED :3163 days ago
சேலம்: சேலம், மரவனேரியில், தேசிய சேவா சமிதி வளாகத்தில், தன்வந்த்ரி பகவான், மகா ஹோமம், நேற்று நடந்தது. தன்வந்த்ரி ஆசிரமம் டிரஸ்ட் சார்பில், 16ம் ஆண்டாக நடக்கும் ஹோமம், காலை, 7:30 மணிக்கு, கோ மாதா பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, கணபதி, நவக்கிரகம், ஆயுஷ், சுதர்சன, மகாலட்சுமி ஹோமங்களை தொடர்ந்து, தன்வந்த்ரி மஹா ஹோமம் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர், சங்கல்பம் செய்து வழிபட்டனர். மதியம், 12:30 மணியளவில் பூர்ணாஹூதி முடிந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. நிறைவாக, ராமானுஜர் மணிமண்டபத்துக்கு நன்கொடைகள் பெறப்பட்டன. நன்கொடை வழங்கினால், வருமானவரி சலுகை உண்டு என, அறிவிக்கப்பட்டுள்ளது.