உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை அஷ்டமி: காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமி: காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை

தர்மபுரி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சண காசி கால பைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.  

தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சண காசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மாற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.   கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதலுக்காக, சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துவர். மேலும், கோவிலை, 18 முறை சுற்றி வந்து, கால பைரவரை தரிசனம் செய்வர். மாசி மாத தேய்பிறை அஷ்டமியான , கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு,  காலை, 6:00 மணிக்கு கால பைரவருக்கு அஷ்ட பைரவ யாகம், அஷ்ட லஷ்மி யாகம், தனகார்சன குபேர யாகம், அதிருந்ர யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான திரவியம், வாசனை பொருட்களால் அபிேஷகம் மற்றும் ஆகம பூஜைகள் நடந்தன.   பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.  காலை, 11:00 மணிக்கு, பைரவ உற்சவர் கோவிலை சுற்றி வலம் வந்தார். பின் நள்ளிரவு, 2:00 மணிக்கு நாய் வாகனத்தில், தட்சண காசி காலபைரவர் கோவிலை சுற்றி ஊர்வலம் வந்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !