உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு சிறப்பு வழிபாடு

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு சிறப்பு வழிபாடு

சைதாப்பேட்டை: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு, நேற்று நடைபெற்றது. அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், அதிக மதிப்பெண் பெறுவதற்கான சிறப்பு பூஜை, நேற்று காலை, 7:00 மணிக்கு நடைபெற்றது.  அதில், மாணவர்கள் அகல் விளக்கு ஏற்றி வேண்டி கொண்டனர். பின், சத்யானந்தா யோகா மையம் சார்பில், யோகாசனம், தியான பயிற்சிகள் நடைபெற்றன.  நந்தகுமார், ஐ.ஆர்.எஸ்., மற்றும் கலைமகன் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், சின்னத் திரை பிரபலங்கள் பாலாஜி, ஜானகிராமன் ஆகியோர், மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் பேசினர். மேலும், கடந்த ஆண்டு வழிபாட்டில் பங்கேற்று, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் பாராட்டப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !