ஆதியோகி சிவன் யோகத்தின் மூலம் -7: உரக்கச் சொல்லுங்கள்
ADDED :3152 days ago
உலகில் புதியதோர் உதயத்தை உருவாக்குவதில் ஆதியோகி முக்கியமானவராக இருப்பார், அவரால் சுயமாற்றத்திற்கான கருவிகள் சுலபமாக கிடைக்கக்கூடியதாக மாறும். இன்று பெரும்பான்மையான மனிதர்களுக்கு, பல் தேய்ப்பது தெரிந்திருப்பதுபோல, தங்களை எப்படி அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்திருப்பது எனத் தெரிந்திருக்க வேண்டும். மனிதர்களுக்கு தங்கள் உடலையும் மனதையும் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். இது நிகழ்ந்தால், மனிதர்கள் பிரம்மாண்டமான சக்தியாக மாறுவார்கள்.