ஆதியோகி சிவன் யோகத்தின் மூலம் -8: உலகிற்கு தேவையான மாற்றம் ஆதியோகி
ADDED :3150 days ago
ஜாதி, மதம், இனம் ஆகியவற்றைக் கடந்து, வருவோர் அனைவருக்கும் மாற்றத்திற்கான கருவிகளை வழங்கும் இடங்களை உருவாக்க விரும்புகிறோம். இது கோரிக்கைகள் வைப்பதற்கான இடமில்லை, இது ஆன்மிக சாதனை செய்வதற்கான இடம். இன்று, முன்பு எப்போதும் இல்லாத அளவு அதிக மக்கள் உள்நிலை தேடுதலில் இருக்கிறார்கள். தற்போது பிரசாரம் செய்யப்படும் நம்பிக்கை முறைகளால், முன்பு இல்லாத அளவுக்கு அதிகமான மக்கள் ஏமாற்றமடைந்து உள்ளார்கள். அதில் அர்த்தம் இருப்பதுபோல் தெரியாவிட்டாலும், நிறையபேர் அவர்கள் நம்பிக்கை முறைகளைப் பற்றிக்கொண்டு இருப்பதற்கு காரணமே, வேறு மேலான மாற்றுவழி அவர்களுக்கு கிடைக்காதது தான். நல்லதொரு மாற்றுமுறையை கண்டறியச் வழிசெய்ய வேண்டும். உலக நல்வாழ்வு இதில் அடங்கியிருக்கிறது.