ராம்நகர் கோதண்ட ராமஸ்வாமி கோயிலில் யஜூர் வேத சம்பூர்ண ஜடா பாராயணம்
ராம்நகர்: ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், ஸ்ரீ கிருஷ்ண யஜூர் வேத சம்பூர்ண ஜடா பாராயண வைபவம் நேற்று வேதவிற்பன்னர்கள் சூழ நடந்தது.
கிருஷ்ண யஜுர் வேத சம்பூர்ண ஜடா பாராயணம் என்பது கிருஷ்ண யஜுர் வேதத்தின் முழுமையான சாரம் ஆகும். ஜடா என்பது வேதங்களின் ஒரு குறிப்பிட்ட வகையாகும், இது வேதத்தின் பல பகுதிகளை பலவிதமான வரிசை முறைகளில் தொடர்ந்து பாராயணம் செய்வதாகும். கிருஷ்ண யஜுர் வேதத்தில், மூன்று முக்கிய பிரிவுகளான, தைத்தேரய, மைத்ராயணி மற்றும் கதா ஆகியவற்றிலிருந்து, எட்டு துணைப்பிரிவுகள் உள்ளன. அவற்றை ஒலி பிறழாமல் துல்லியமாக பாராயணம் செய்கின்றனர். கோயில் அபிநவ வித்யா தீர்த்த மண்டபத்தில் நேற்று காயத்ரி சுப்ரமணிய கனபாடிகள் தலைமையில், 15 க் கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள் வேதபாராயணம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி மாலை 5:30 முதல் 7:30 மணி வரை டிச.28 வரை நடைபெறும்.