உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை சிவாலயங்களில் தீபத் திருவிழா கோலாகலம்

சென்னை சிவாலயங்களில் தீபத் திருவிழா கோலாகலம்

சென்னை: கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கோலாகலமாக ந டந்தது.


கார்த்திகை மாத பவுர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாள், தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிற விழா கார்த்திகை தீபத் திருவிழா. சிவாலயங்களின் பழக்க வழக்கத்தின்படி, திதி பார்த்து கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் ஜோதிப் பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவுகூர்ந்து வழிபடுவர். அதன்படி சைதாப்பேட்டை காரணீஸ்வரர், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில், நேற்று முன்தினம் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது. இரவு சொக்கப்பனை ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !