கைலாச விநாயகர் கோவிலுக்கு 55 கிலோ வெள்ளி கவசம்
ADDED :3265 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே, கணேசபுரம் கிராமத்தில், கைலாச விநாயகர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக உள்ள, ஐந்தரை அடி விநாயகர் சிலைக்கு, சென்னை டி.வி.எஸ்., நிறுவன நிர்வாக இயக்குனர் வேணு சீனிவாசன், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், 55 கிலோ எடையுள்ள வெள்ளி கவசத்தை, நேற்று முன்தினம் காணிக்கையாக செலுத்தி சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர், படவேடு ரேணுகாம்பாள் அம்மன், யோக நரசிம்ம மூர்த்தி, கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.