உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளிபாளையம் மாரியம்மன் பூச்சாட்டு, கம்பம் நடும் விழா

கள்ளிபாளையம் மாரியம்மன் பூச்சாட்டு, கம்பம் நடும் விழா

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில் பூச்சாட்டு மற்றும் கம்பம் நடும் விழா நடந்தது. குமாரபாளையம் அடுத்த, கள்ளிபாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. வரும், 28 இரவு, 7:00 மணிக்கு சக்தி அழைப்பு வைபவம், மார்ச், 1 காலை, 6:00 மணியளவில் பூ மிதித்தல், மார்ச், 2ல் மஞ்சள் நீராட்டு விழா ஆகியவை நடக்க உள்ளன. விழா நடக்க உள்ள, மூன்று நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் காளிமுத்து உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர். அதேபோல், குமாரபாளையம் காளியம்மன் கோவில் மறு பூச்சாட்டுதல், தேவாங்கர் மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டு மற்றும் கம்பம் நடும் விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !