கந்தம்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா
ADDED :3153 days ago
சூரமங்கலம்: சேலம், கந்தம்பட்டி, கோனேரிக்கரையில் உள்ள, சக்தி காளியம்மன் கோவிலில், 45ம் ஆண்டு திருவிழா நடந்து வருகிறது. அதில், நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்தனர். இரவு, 8:00 மணிக்கு சக்தி அழைத்தல், சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, பூங்கரகம் எடுத்து வருதல், பொங்கல் வைபவம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு அலகுகுத்துதல், அக்னி கரகம் எடுத்தல் நடந்தது. இன்று மாலை, 3:00 மணிக்கு, சிறுவர், சிறுமிகளுக்கு, விளையாட்டு போட்டிகள், இரவு, 10:00 மணியளவில், அம்மன் சத்தாபரணம், நாளை மதியம், மஞ்சள் நீராடுதல் நடக்கும்.