காசி விஸ்வநாதர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா
ஊட்டி : ஊட்டி காந்தள், விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், நாளை மகா சிவராத்திரி விழா நடக்கிறது. ஊட்டி காந்தள் விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், இந்த ஆண்டு நவராத்திரி விழா இன்று மாலை, 3:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. காந்தள் ஆதிபராசக்தி மகளிர் குழு, ஊட்டி ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றம், விசாலாட்சியம்பாள் மகளிர் குழுவினர் சார்பில் நடக்கும், இதில், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன. நாளை காலை, 7:00 மணிக்கு கலச சாந்தி பூஜை, காலை, 11:00 மணிக்கு உச்சி கால பூஜை, காலை, 11:30 மணிக்கு அன்னதானம், பிற்பகல், 2:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா யாக பூஜை, மாலை, 3:00 மணிக்கு, மகா பிரதோஷம், மகா சிவராத்திரி வழிபாடு, 3:30 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 5:30 மணிக்கு மகா தீபாராதனை, மாலை, 6:00 மணிக்கு சுவாமி கோவில் வலம் வருதல் ஆகியவை நடக்கின்றன. தொடர்ந்து இரவு, 7:30 மணிக்கு யோகத்தில் சிறந்தது பக்தி யோகமே, கர்ம யோகமே என்ற தலைப்பில், அரசு கலை கல்லுாரி முனைவர் மணிவண்ணன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடக்கிறது. தொடர்ந்து மாணவ, மாணவியரின் பாடல்கள், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், தென்றல் ஆர்கெஸ்ட்ரா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தட்சிணாமூர்த்தி திருமடாலய அறங்காவலர் குழு, காசி விஸ்வநாத சுவாமி கோவில் முன்னேற்ற சங்கத்தினர், சேவா சங்கத்தினர், விசாலாட்சியம்பாள் மகளிர் குழுவினர், ராயபோயர் குழுவினர் உட்பட பக்தர்கள் செய்து வருகின்றனர்.