கோட்டை மாரியம்மன் மாசித் திருவிழா: பூத்தமலர் பூ அலங்காரத்துடன் துவக்கம்
ADDED :3154 days ago
திண்டுக்கல், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா நேற்று பூத்த மலர் பூ அலங்காரத்துடன் துவங்கியது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பாலபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. மாலையில் பூத்தமலர் பூ அலங்காரத்தையொட்டி, மண்டகப்படியினரால் அம்மனுக்கு பல்வேறு மலர்களால் பூ அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (பிப். 24) பூச்சொரியல் விழாவும், காலை 9:00 மணிக்கு பூத்தேர் பவனியும் நடக்கிறது. அதில் அம்மனுக்கு பூக்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படும்.