உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயக்குடியில் மாசித் திருவிழாவிற்காக அக்னி சட்டிகள் தயாரிப்பு

ஆயக்குடியில் மாசித் திருவிழாவிற்காக அக்னி சட்டிகள் தயாரிப்பு

பழநி, பழநி அருகே ஆயக்குடியில் மாரியம்மன் கோயில்களின் மாசித் திருவிழாவுக்காக அக்னிசட்டிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பழநி கிழக்குரதவீதி மாரியம்மன்கோயில், கொழுமம் மாரியம்மன்கோயில் மற்றும் இதர அம்மன் கோயில்களில் மாசித்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இவ்வாண்டு மாசித் திருவிழாவை எதிர்பார்த்து ஆயக்குடியில் அக்னிசட்டிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மண்பாண்ட தொழிலாளி பெருமாள் கூறுகையில்,“ மாசித் திருவிழாவிற்காக அக்னிசட்டிகள் தயார் செய்கிறோம். தற்போது மண், விறகு விலை உயர்வால் அக்னிசட்டியை ரூ.50 முதல் ரூ. 70 வரை விற்கிறோம். வழக்கத்தை காட்டிலும் வியாபாரம் குறைவுதான்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !