மருதூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :3154 days ago
குளித்தலை: மேட்டு மருதூர் அங்காளம்மன் கோவிலில், சிவராத்திரி விழா முன்னிட்டு, தேரோட்டம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. குளித்தலை அடுத்த, மேட்டு மருதூர் அங்காளம்மன் கோவிலில், மாசி மஹா சிவராத்திரி விழா முன்னிட்டு, முக்கிய வீதிகளின் வழியாக குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மூன்றாம் நாள் தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி காலை, 11:30 மணிக்கு துவங்கியது. முக்கிய வீதிகளில் தேர் இழுக்கப்பட்டு, மாலை, 4:00 மணியளவில், தேர்நிலைக்கு வந்து சேர்ந்தது. இரவு, 8:00 மணியளவில் காளை வாகனத்தில் சுவாமி முக்கிய வீதிகள் வழியாக எடுத்து செல்லப்பட்டார். இதில், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் என, பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.